பாடல் எண் : 1
மேரு விலாவதின் நானார வாவொரு
வெங்கணை மாலரியா
விரிதலை யுலகத் தர தேரா வதிலுறு
மிருசக டிரு சுடரா
ஆரண நாம் பிரியா வம்புயன்
அமைவுறு சாரதியா
அவைநீ யூற்றிக லழியமுப்புரம்
அட்டிடு மந்நாளின்
சீருறு மூவர்க ளழியாதுன்னடி
சேரா நின்றனராற்
சிந்தையி லூன்றனை மறவாதார்த்தமைத்
தொறுபவ ரெவரே கான்
வெரி நறுந்தொடை மாதொருபங்குறை
வெற்பே கற்பகமே
வேத கிரிப்பவ ரோக வயித்திய
வேணி முடிக்கணியே
பாடல் எண் : 2
ஆயு தாந்தனி லேயும் பொழுதும்
ஐம்பே ரிடராகும்
அகிலத் துருசிறு குழவிப் பருவத்
தறியா மையினியிட ராகும்
ஏய குமாரத் திடர்க மத்தால்
எழின்மனை சுதரெனவே
ஏயும் பொழுது மிடர்பினி யாலிடர்
இலாத மிடிவந்தால்
காயும் பசியா லிடர்பின் நரைதிரை
கானுறு போதுமிடர்
கால னுதித் திடு போதுறு மிடரைக்
கடவுள் நீயறிவாய்
மேய விடர்க்கடல் மூழ்கு மெனச்சுக
வேளை யினீ வைப்பாய்
வேத கிரிப்பவ ரோக வயித்திய
வேணி முடிக்கனியே
பாடல் எண் : 3
களபப் படிரப் புளகக் கொங்கைக்
கன்னியர் போகத்தைக்
கருதிக் கருதிக் சுடர் வீட்டிலினிற்
கடையேன் மடியாமல்
இளகு மனத்தோ டுணையே நாடி
இருந்திருங் கென்செயல்போய்
எல்லா நின்செய லாக நினைந்தென்
இருளரு நாளென் றோ
முலரிநி கர்த்திடு கண்ணற் கரசே
முண்டக னுக் கரசே
முத்திக் கரசே பத்திக் கரசே
மூதறி வொர்க் கரசே
விளரிய டுத்தளி பாடி முரன்றெழு
வெறியார் பொழில் சூழும்
வேத கிரிபவ ரோக வயித்திய
வேணி முடிக்கனியே
பாடல் எண் : 4
அளியுளீர் மேலு நின்மே லன்பும்
ஆகந் தனையமானாய்
அறியு முவர்ப்பும் நின்றிடு ஞானம்
அடியே னுக்கருளிப்
புளிதரு பழமு மோடும் போலப்
புரை தீர் நெஞ்சினர்பாற்
போக மற்று திரோத மெனக்குப்
போக்கிற் குறைப்படுமோ
போத விருந்திக் தீதகல் வித்துன்
பொன்னடி யென்றருள்வாய்
ஒளிதரு மிமயாசல முன்னுதவிய
வொருமயில் களிகூர
வுற்றிடு காரே கற்றவர் சீரே
யோது மறைப்பு பேறே
வெளியினில் வெளியே பொளியினி லொளியே
மிகுசுக சாகரமே
வேத கிரிபவ ரோக வயித்திய
வேணி முடிக்கனியே
பாடல் எண் : 5
அளியுளீர் மேலு நின்மே லன்பும்
ஆகந் தனையமானாய்
அறியு முவர்ப்பும் நின்றிடு ஞானம்
அடியே னுக்கருளிப்
புளிதரு பழமு மோடும் போலப்
புரை தீர் நெஞ்சினர்பாற்
போக மற்று திரோத மெனக்குப்
போக்கிற் குறைப்படுமோ
போத விருந்திக் தீதகல் வித்துன்
பொன்னடி யென்றருள்வாய்
ஒளிதரு மிமயாசல முன்னுதவிய
வொருமயில் களிகூர
வுற்றிடு காரே கற்றவர் சீரே
யோது மறைப்பு பேறே
வெளியினில் வெளியே பொளியினி லொளியே
மிகுசுக சாகரமே
வேத கிரிபவ ரோக வயித்திய
வேணி முடிக்கனியே
பாடல் எண் : 8
அகலி சராசர மேவையு நடத்துவை
ஐந்தொழிலாலி வையுள்
ஆன சிருட்டி யளித்த லழிதலும்
ஆக மதிற் சாரும்
புகலு மறப்புந் தெளிவுற்றலுமே
பொலி யுயிரிடை சாரும்
போக மற்று திரோத மெனக்குப்
போக்கிற் குறைப்படுமோ
பகருரு மறிவா னந்த சுடரே
பரகதி யெனை யுய்க்கும்
பண்பார் துணையை யென்பாலமுதே
பாகே மா கடலே
மிகுநெறி தவமார் தெய்வ கங்கம்
விளங்கி யிருந்த தொழும்
வேத கிரிபவ ரோக வயித்திய
வேணி முடிக்கனியே
பாடல் எண் : 9
தனதா னியமிட மாடா டாதி
தயங்கு பொருட்சார்புத்
தரு தாய் தந்தைகண் மின்னா ராதி
சாறு முயிர்ச் சார்பும்
இன மார் சார்புக லிவைமே லாசை
யிகந்தா மையி னைந்தும்
எழில்பெற உட்கொண்டசையா தென்று
மிருந்து சமாதியிலே
மனமார் வாதனை யறவே யென்று
மதித்த கழுத்தியனாய்
மாநிற லாற்றுனை யென்றணை கிற்பேன்
மாத வாமா கடலே
மினலார் மேகந் தாங்கிப் பொழில்வாய்
வவெண்டாரை துளிகால்
வேத கிரிப்பவ ரோக வயித்திய
வேணி முடிக்கனியே
பாடல் எண் : 10
வீடென் றறைதரு சொற்குப் பொருளோ
விடுதலை யாதலினால்
வீக குண் டோனுங் கட்டும் முன்னர்
விளங்குந் திடமாகப்
பீடுறு கட்டுத் தானாய் விட்டுப்
பெயரா திதுசடமாம்
பிணி பட்டோன் சுதந்திரனாமிப்
பினிப்பெயரைச் செய்வோன்
நீடு சுதந்திர முளனா மொருவன்
நேரு முவ்வே துவினால்
நிகழ்பதி பசு பாசம்மெனு முப்பொருள்
நித்திய மென்றருளி
வேடனை வேல்லுங் குருவா யெனையாள்
மெய்ப் பொருள் நீயன்றோ
வேத கிரிப்பவ ரோக வயித்திய
வேணி முடிக்கனியே